காலை உணவு என்பது தவிர்க்க கூடாத உணவு. இது மூளையையும் உடலையும் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
நட்ஸ் மிகவும் ஆரோக்கியமானது என்பதோடு, உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.
மஞ்சள் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இஞ்சி, கிராம்பு, பெருஞ்சீரகம், ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களை தேநீரில் சேர்த்துக் கொள்வது நோய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உங்களை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
புரதத்தின் முக்கிய ஆதாரம்மான முட்டை அவசியம் உங்கள் டயட்டில் இருக்கட்டும். ஆனால், அதனை அளவோடு சாப்பிட வேண்டும்.
பழங்கள் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.