BMW Motorrad: புதிய சூப்பர் பைக் இந்தியாவில்...

பிஎம்டபிள்யூ மோட்டோராட் பிரீமியம் நடுத்தர அளவிலான ஸ்கூட்டர் பிரிவில் புதிய பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி இந்தியாவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ மோட்டோராட் இந்தியா புதிய பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியம் நடுத்தர அளவிலான ஸ்கூட்டர் முழுமையாக கட்டப்பட்ட யூனிட்டாக (சிபியு) கிடைக்கும் மற்றும் அனைத்து பிஎம்டபிள்யூ மோட்டோராட் இந்தியா நிறுவனத்தின் டீலர்களிலும் முன்பதிவு தொடங்கிவிட்டது  

Also Read | 1360 கிமீ பயணத்தை ஒரே பயணத்தில் முடித்த டொயோட்டா Mirai 

1 /5

புதிய BMW C 400 GT பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 9,95,000 ரூபாய் ஆகும். ஆல்பைன் ஒயிட் மற்றும் ஸ்டைல் டிரிபிள் பிளாக் (Style Triple Black) நிறங்களில் கிடைக்கும்.

2 /5

நவீன   முன்புறம் ஏரோடைனமிக் முறையில் இரட்டை எல்இடி ஹெட்லைட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது புதிய பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி. இது தினசரி வாழ்க்கைக்கும், சுற்றுலா செல்வதற்கும் ஏற்றது  

3 /5

நீரால் குளிரூட்டப்பட்ட ஒற்றை சிலிண்டர் கொண்ட 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7500 ஆர்பிஎம்மில் 34 ஹெச்பி (25 கிலோவாட்) மற்றும் அதிகபட்சமாக 35 என்எம் டார்க் 5750 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக இன்ஜின் சக்தியை வழங்கும். புதிய பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி 9.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தில் பயணிக்கும். மணிக்கு அதிகபட்சமாக 139 கிமீ வேகம் வரை செல்லும்.  

4 /5

முன்பக்கத்தில் இரட்டை வட்டு, பின்புறத்தில் ஒற்றை வட்டு மற்றும் ஏபிஎஸ் மற்றும் தரத்துடன் கூடிய உயர் செயல்திறன் கொண்ட பிரேக் அமைப்பு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஸ்கூட்டர் ஒரு பக்க ஸ்டாண்ட் மற்றும் சென்டர் ஸ்டாண்ட் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது, இது பைக்கை எளிதாக நிறுத்த உதவுகிறது  

5 /5

அனைத்து பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்குகளும் 'மூன்று வருடங்கள், வரம்பற்ற கிலோமீட்டர்கள்' நிலையான உத்தரவாதத்துடன் வருகின்றன, உத்தரவாதத்தை நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டு வரை நீட்டிக்க முடியும்.