பிக்பாஸிற்கு பிறகு அடையாளம் தெரியாமல் மாறிய சரவண விக்ரம்! என்னப்பா ஆச்சு?

BB 7 Tamil Contestant Saravana Vickram Photos : பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்றவர், சரவண விக்ரம். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். 

BB 7 Tamil Contestant Saravana Vickram Photos : சின்னத்திரை சீரியல்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்தவர், சரவண விக்ரம். இவர், சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்ற ‘பிக்பாஸ்’ சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து சில வாரங்கள் பெரிதாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லமல இருந்த இவர், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “சரவண விக்ரமிற்கு என்னதான் ஆச்சு?” என்று கேட்டு வருகின்றனர். காரணம், அப்புகைப்படங்களில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார். 

1 /7

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே மிகவும் பிரபலமாக இருந்தவர், சரவண விக்ரம். இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் கண்ணன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இவரது கதாப்பாத்திரத்திற்கும் இவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததை ஒட்டி, இவர் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார். 

2 /7

சரவண விக்ரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒருமுறை வீட்டின் தலைவராக பொறுப்பில் இருந்தார். அதன் பிறகு இவரை காமெடி பீஸ் ஆக்கிய நெட்டிசன்கள், ‘சரவண விக்ரம்-டைட்டில் வின்னர்’ என இவர் பேசியதையும் வைரலாக்கினர். 

3 /7

சரவண விக்ரம், பிக்பாஸ் வீட்டிற்குள் அக்‌ஷயா, மாயா, பூர்ணிமா உள்ளிட்ட சிலருடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்தார். 

4 /7

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என ஆமோதித்தவர்களுள் இவரும் ஒருவர். இதனால் இவர் மீது பலருக்கு வெறுப்பு எழுந்தது. அது மட்டுமன்றி, இவர் பூணிமா மற்றும் மாயாவுடன் நெருக்கமாக பழகியதும் பலருக்கு பிடிக்கவில்லை. 

5 /7

இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபேமிலி எபிசோடின் போது பெற்றோர்கள் சொன்ன காரணத்திற்காக மாயாவிடம் இருந்து விலகியிருந்தார். இதனால் இவர் எவிக்ட் ஆகி வெளியில் சென்ற போது கூட இவரிடம் மாயா பேசவில்லை. 

6 /7

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு முன்னதாக சரவண விக்ரம் உள்பட பிற பிக்பாஸ் போட்டியாளர்கள் கெஸ்டாக மீண்டும் பிபி இல்லத்திற்குள் நுழைந்தார். அப்போது மாயாவிடம் சாரி கேட்டு இவர் சமாதானமாக சென்றது, இவரது குடும்பத்தினர் உள்பட பல ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் சரவண விக்ரமுக்கு கெட்ட பெயர் எழுந்தது. 

7 /7

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சரவண விக்ரம் தனது தொழிலை விடப்போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டு பின்னர் அதனை டெலிட் செய்தார். தற்போது தாடி மற்றும் முடியை பெரிதாக வளர்த்துக்கொண்டு இருக்கும் இவரது தோற்றம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.