ஓவியா to அசீம்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..!

Bigg Boss 7 Tamil Controversial Contestants: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்களையும் அவர்களால் உருவான சர்ச்சைகளை இங்கே பார்க்கலாம். 

1 /8

பிக்பாஸ் சீசன் 7 இன்று தொடங்க உள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குள்ளான போட்டியாளர்களையும் அவர்களால என்ன சர்ச்சைகள் உருவானது என்பதையும் இங்கே பார்ப்போம். 

2 /8

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர், ஓவியா. இவர், அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற நடிகர் ஆரவ்வை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு முறை பிக்பாஸ் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இவருக்கு “ஓவியா ஆர்மி” என்ற பெயரில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. 

3 /8

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளர், பரணி. இவர், நிகழ்ச்சியின் பாதியிலேயே தப்பிக்க முயன்றார். அதனால், பாதிலியேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

4 /8

பிக்பாஸ்  இரண்டாவது சீசனின் போட்டியாளர், ஐஸ்வர்யா தத்தா. இவர், தனது சக போட்டியாளரான தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 

5 /8

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா ஆனந்த ஆகியோரும் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர். அப்போது மகத், யாஷிகாவிற்கு “ஐ லவ் யூ” கூறினார். அப்போது மகத்தின் காதலி பிராச்சி அவருடனான காதலை முறித்துக்கொள்வதாக கூறினார். அதன் பிறகு மகத் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் தனது காதல் பிராச்சியை திருமணம் செய்து கொண்டார். 

6 /8

பிக்பாஸ் மூன்றாவது சீசனின் முக்கிய போட்டியாளராக இருந்தவர், வனிதா விஜயகுமார். இவரது கருத்துகளும், பேசும் விதங்களும் மக்களிடம் பெரிய எதிர்ப்பை கிளப்பியது. இவராலேயே இந்த சீசனின் டி.ஆர்.பி வெகுவாக உயர்ந்தது. 

7 /8

பிக்பாஸ் சீசன் 5-ல் மக்களின் கவனத்தை ஈர்த்த போட்டியாளர்கள், பாவனி-அமிர். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியிலேயே காதலை வளர்த்து கொண்டதாக கூறப்பட்டது. இவர்களின் காதல் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியில் வந்தவுடன் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.  

8 /8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடந்து முடிந்த 6வது சீசன், சர்ச்சைக்கு மறுபெயராக இருந்தது. இதில், ஆரம்பத்தில் இருந்து “அறம் வெல்லும்..” என்று கூறிய விக்ரமன் இறுதியில் ரன்னர் அப் பட்டம் பெற்றார். சக போட்டியாளர்கள் மீது கோபமாக எரிந்து விழுந்த அசீமிற்கு கடைசியில் வெற்றியாளர் மகுடம் சூட்டப்பட்டது. இது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சீசனின் முடிவை பலர் இன்றளவும் ஏற்றுக்கொள்ளவில்லை.