சருமம் பளபளப்பாக இருக்க பாலிவுட் நடிகைகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

பாலிவுட் நடிகைகள் தங்களை பளபளப்பாக காட்டி கொள்ள பல விதங்களில் சிரமப்படுகின்றனர். அவர்களின் தினசரி பியூட்டி டிப்ஸ் இதுதான்.

1 /5

ஆலியா பட் பலவிதமான ஸ்கின் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுகிறார். சில நேரங்களில் அவரது தோல் மிகவும் வறண்டு போவதாகவும், வறண்ட திட்டுகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். ஆலியா பட் தனது முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க மென்மையான கிரீம்களை பயன்படுத்துகிறார்.

2 /5

தீபிகா படுகோன் சமீபத்தில் 82°E என்ற தனது ஸ்கின் பராமரிப்பு பிராண்டை அறிமுகப்படுத்தினார். ஒரு நேர்காணலில், தீபிகா தூங்குவதற்கு முன் மேக்கப்பை அகற்றி, சுத்தம் செய்வதில் மிகவும் கவனமாக இருப்பதாக கூறினார். "நான் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் அல்லது என் நாள் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், மேக்கப்பை நீக்குவதில் நான் எப்போதும் குறிக்கோளாகக் கொள்கிறேன்" என்று கூறினார்.

3 /5

கரீனா கபூர் கான் தினமும் முகத்தில் தேனை தடவுவதன் மூலம் பிரகாசம் பெறுவதாக கூறியுள்ளார். மேலும் பல நாட்கள் தெளிவான, ஆரோக்கியமான தோற்றமுடைய சருமத்திற்கு தயிருடன் கலந்த பாதாம் எண்ணெயையும் அவர் பயன்படுத்துகிறார்.  

4 /5

கத்ரீனா கைஃப் தனது சருமத்தில் அனைத்து வகையான ஒப்பனைப் பொருட்களையும் பயன்படுத்துவதால், ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் மற்றும் நிறைய சன்ஸ்கிரீன்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். 

5 /5

ஜான்வி கபூர் இயற்கை வீட்டு வைத்தியத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார். முக்கியமாக பழங்களை முகத்தை மசாஜ் செய்ய பயன்படுத்துகிறார், மேலும் இது இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது.