அடேங்கப்பா... ஒரு மொபைலில் 24 GB RAM ஆ... கெத்தாக அறிவித்த Realme!

இதுவரை இல்லாத அளவில் 24 GB RAM உடன் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட இருப்பதாக Realme நிறுவனம் அறிவித்துள்ளது. அதுகுறித்தும், அந்த மாடல் குறித்து இப்புகைப்படத் தொகுப்பில் காணலாம். 

  • Aug 18, 2023, 20:48 PM IST

 

 

 

 

 

 

1 /7

Realme நிறுவனத்தின் தலைவர் Xu Qi Chase கருத்துப்படி, மிகவும் பிரபலமான Realme GT 5 மாடல் ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 

2 /7

இதுகுறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் RAM குறித்த தகவல் பொதுவில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த மாடல் மொபைல் வெளியிடப்படும் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  

3 /7

ஸ்மார்ட்போன் 24 GB வரை RAM வசதியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

4 /7

தொலைபேசியின் சார்ஜிங் விவரக்குறிப்புகளுடன், வேறு சில அம்சங்களும் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஊடக அறிக்கைகளின்படி, இந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான Realme GT 3-இன் மாற்றாக அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

5 /7

"அடுத்த Realme GT 5 இல் 24GB வரை ரேம் இருக்கும். கூடுதலாக, குவால்காமின் முதன்மையான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC உடன் செயல்படும்" என Realme நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.  

6 /7

240W வேகமான சார்ஜிங்கிற்கான ஸ்மார்ட்போனின் ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

7 /7

இருப்பினும், Realme GT 5 மாடல் குறித்த வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.