ஊழியர்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட் - நிதி அமைச்சகம் அறிவிப்பு!

LIC Agent Benefits: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஊழியர்கள் மற்றும் எல்ஐசி முகவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து பெரும் பரிசு கிடைத்துள்ளது. 

  • Sep 18, 2023, 19:56 PM IST

அவர்களுக்காக பல நலத்திட்டங்களை இன்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதுகுறித்து முழுமையாக காணலாம். 

 

 

 

 

1 /7

பணிக்கொடை வரம்பு அதிகரிப்பு, மீண்டும் நியமனம் செய்யப்பட்ட முகவர்களுக்கான புதுப்பித்தல் கமிஷன், டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இதில் அடங்கும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இத்தகைய சலுகைகளுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

2 /7

இதன் மூலம், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட முகவர்களும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், இந்த நலத்திட்டங்களால் பயன்பெற முடியும்.

3 /7

இது தொடர்பாக நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நலத்திட்டங்கள் அனைத்தும் எல்ஐசி (ஏஜென்ட்) விதிமுறைகள் 2017இல் திருத்தம், பணிக்கொடை வரம்பு அதிகரிப்பு மற்றும் குடும்ப ஓய்வூதியத்தின் சீரான விகிதம் போன்றவற்றுடன் தொடர்புடையவை என குறிப்பிட்டுள்ளது. 

4 /7

எல்ஐசி முகவர்களுக்கான பணிக்கொடை வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. 

5 /7

மற்றொரு அறிவிப்பில், முகவர்களுக்கான டேர்ம் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்கப்பட்டு அதன் வரம்பு ரூ.3000 - 10,000 இல் இருந்து ரூ.25,000-1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது எல்.ஐ.சி.யில் பணிபுரியும் நபர்களின் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணி செய்யப்பட்டுள்ளது.

6 /7

இது தவிர, மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்ட பிறகு வரும் எல்ஐசி முகவர்களை புதுப்பித்தல் கமிஷனுக்கு தகுதியுடையவர்களாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி ஊழியர்கள் குடும்ப ஓய்வூதியத்தின் பலனை 30 சதவிகிதம் சீரான விகிதத்தில் பெற முடியும். இந்த நலத்திட்டங்கள் எல்ஐசி முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்களின் பணி நிலைமையை மேம்படுத்தும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. 

7 /7

13 லட்சத்துக்கும் மேற்பட்ட முகவர்களும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கமான ஊழியர்களும் இந்த நலத்திட்டங்களால் பயனடைவார்கள் என்றும், எல்ஐசியின் வளர்ச்சியிலும், இந்தியாவில் காப்பீட்டு ஊடுருவலை ஆழமாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.