IND vs SA, 1st T20: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்பதை இதில் காணலாம்.
IND vs SA: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரு அணிகளும் விளையாட உள்ளது.
IND vs SA, Suryakumar Captaincy: சூர்யகுமார் யாதவ் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா தொடருக்கு பின் தற்போது வெளிநாட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய டி20 அணியை வழிநடத்துகிறார்.
IND vs SA, Squad: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.
IND vs SA, 1st T20 Probable Playing 11: சுப்மான் கில்/ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன்/ஜித்தேஷ் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரின்கு சிங், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிராஜ்.
IND vs SA, Team India Bowling: இன்றைய பந்துவீச்சு வரிசையில் சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஆகிய 5 பேர் ஆப்ஷன்தான் உள்ளது.
IND vs SA, Indian Batting Openers: கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி ஓப்பனிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், கில் தற்போது அணிக்குள் திரும்பியிருப்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓப்பனிங்கை பிரித்து கில்/ருதுராஜை ஒன்-டவுணில் இறக்குமா அல்லது இருவரில் ஒருவரை வெளியே அமரவைக்குமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
Ruturaj Gaikwad vs Shubman Gill: இதில் ஜெய்ஸ்வாலின் அதிரடி தொடக்கம் தேவை என்பதால் கில் மற்றும் கெய்க்வாட் ஆகியோருக்கு இடையேதான் போட்டி. மேலும், இஷான் கிஷன்/ஜித்தேஷ் ஆகியோரில் ஒருவர் நிச்சயம் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும். 5 பந்துவீச்சாளர்களுடன் ரின்கு சிங் பினிஷர் ரோலில் உள்ளார். சூர்யகுமார், ஷ்ரேயாஸ் ஆகியோர் நிச்சயம் இடம்பிடிப்பார்கள் என்பதால் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில் ஆகியோரில் ஒருவருக்குதான் வாய்ப்பு கொடுக்க முடியும், அதுவும் ஓப்பனிங்கில். இல்லையெனில் ஷ்ரேயாஸ் ஐயரை தியாகம் செய்துவிட்டு, கெய்க்வாட் அல்லது கில் ஆகியோரில் ஒருவரை 3ஆவது வீரராக இறக்க வேண்டும்.