செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோ

Big Changes From September 1 2024: செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் ஆதார் கார்டுகளின் புதுப்பிப்புகள் வரை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.

Big Changes From September 1 2024: வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும். இவற்றின் தாக்கம் நிதி ரீதியாகவோ அல்லது செயல் ரீதியாகவோ நம் மீது இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதலும், பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்கள் மீது நிச்சயமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்? இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

1 /9

நாளை செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் காரணமாக அன்றாட வாழ்க்கை மற்றும் சாமானியர்களின் பண பரிமாற்ற முறைகள் மற்றும் நிதி நிலைகளிலும் மாற்றம் ஏற்படக்கூடும். செப்டம்பர் 1 முதல் ஏற்படக்கூடும் முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /9

செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்காத GST வரி செலுத்துவோர் செப்டம்பர் 1 முதல் GST அதிகாரிகளிடம் GSTR-1 என அழைக்கப்படும் வெளிப்புற விநியோக ரிட்டன்களை தாக்கல் செய்ய முடியாது. GST விதி 10A -இன் படி வரி செலுத்துவோர் கண்டிப்பாக செல்லுபடியாகும் விவரங்களை வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்தோ, அல்லது IFF என்றழைக்கப்படும் இன்வாய்ஸ் ஃபர்னிஷிங் வசதியை பயன்படுத்தியோ அல்லது முதல் GSTR-1 -ஐ தாக்கல் செய்த பின்னரோ 30 நாட்களுக்குள் செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்க வேண்டும்.

3 /9

ஆதார் தொடர்பான எந்த வித புதுப்பிப்பையும் செப்டம்பர் 14, 2024 வரை மட்டுமே இலவசமாக செய்ய முடியும். இதற்குப் பிறகு, இதுபோன்ற புதுப்பிப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். முன்னதாக, ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி 14 ஜூன் 2024 ஆக இருந்தது. தற்போது இது செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4 /9

செப்டம்பர் 1 முதல், ஐடிஎஃப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளின் சில விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடிஎஃப்சி வங்கியில் (IDFC Bank) செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை மற்றும் ட்யூ தொகையின் விதிகள் மாறவுள்ளன. மேலும் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கான லாயல்டி திட்டங்கள் மாறும். செப்டம்பர் 1 முதல் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயிக்க உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இந்த பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 2,000 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும். மூன்றாம் தரப்பு செயலிகளின் மூலம் கல்விக் கட்டணங்களுக்காக பணம் செலுத்துவதற்கு HDFC வங்கி எந்த வெகுமதியையும் வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 /9

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், எல்பிஜி சிலிண்டர் விலையில் பொதுவாக மாற்றம் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சாமானியர்களுக்கு இந்த முறையாவது நிவாரணம் கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். செப்டம்பர் மாதத்திலும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம். கடந்த மாதம், வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.8.50 அதிகரித்தது. ஜூலையில் அதன் விலை ரூ.30 குறைந்தது.

6 /9

எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளை போலவே, எண்ணெய் சந்தை நிறுவனங்கள் ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி ஆகியவற்றின் விலைகளையும் மாத துவக்கத்தில் திருத்துகின்றன. இதன் காரணமாக, செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த விலைகளிலும் மாற்றங்கள் இருக்கக்கூடும். 

7 /9

செப்டம்பர் 1ம் தேதி முதல் போலி அழைப்புகள் (Fake calls) மற்றும் செய்திகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும். போலி அழைப்புகள் மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டிராய் கடுமையான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் போலி அழைப்புகள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 /9

செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) டிஏ உயர்வு (DA Hike) பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் இரண்டும் 3% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 53% ஆக அதிகரிக்கும்.

9 /9

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல வித முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றை பற்றிய புரிதலும் தெளிவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் நமக்கு வரக்கூடிய தேவையற்ற சில சிக்கல்கள் மற்றும் குழப்பங்களை தவிர்க்கலாம்.