Asia's richest village is in India : ஆசியாவிலேயே மிகவும் பணக்கார கிராமம் இந்தியாவில் தான் இருக்கிறது என்ற தகவல் உங்களை ஆச்சரியப்பட வைக்கிறதா?
Asia's richest village is in India : உலகிலேயே அதிக கிராமங்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில், ஆசியா கண்டத்தையே ஆச்சரியப்பட வைக்கும் ஒரு கிராமம் இருக்கிறது.
இந்த கிராமம் தான் ஆசிய கண்டத்திலேயே மிகவும் பணக்கார கிராமமாகவும் அறியப்படுகிறது. அப்படியான பணக்கார கிராமம் இந்தியாவில் எங்கு இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். அந்த கிராம் இருப்பது குஜராத் மாநிலத்தில். ஆம், குஜராத் மாநிலம் மதாபர் கிராமம் தான் ஆசியாவிலேயே மிகவும் பணக்கார கிராமம்.
இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 32,000 மட்டுமே. ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு பெரிய வங்கியின் கிளைகளும் மதாபர் கிராமத்தில் காணப்படும்.
இவ்வளவு குறைவான மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் அனைத்து பெரிய வங்கிகளும் இருக்க காரணம் என்ன? அப்படி என்ன தொழில்கள் இங்கு நடக்கிறது? என்ற இயல்பான கேள்விகள் எழலாம்.
ஆனால் இந்த கிராம மக்கள் பெரிய தொழில்கள் செய்யவில்லை என்றாலும், இவர்களின் உறவினர்கள் பலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து இந்த கிராமத்துக்கு பணம் அனுப்புகின்றனர்.
பட்டேல் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில் இருந்து பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சொந்த தொழில் மற்றும் வேலைகளுக்காக சென்றுள்ளனர்.
மாதாபர் கிராமத்தின் பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கிறார்கள். அங்கு கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகின்றனர். வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த கிராம மக்கள் ரூ.7,000 கோடி மதிப்பிலான எஃப்.டி வைத்துள்ளனர்.
அண்மையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, மாதபர் கிராமத்தில் சுமார் 17 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் மக்கள் நல்ல தொகையை டெபாசிட் செய்துள்ளனர். இக்கிராமத்தில் சராசரி தனிநபர் வைப்புத்தொகை ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது. இதனை கணக்கில்கொண்டு தான் பல வங்கிகள் இங்கு கிளைகளை திறந்துள்ளன.