Ketu Gochar 2023 Impact: கேது 18 மாதங்களுக்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார். அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும் சஞ்சாரத்தில், நிழல் கிரகமான கேது, துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.
நவகிரகங்களில் நிழல் கிரகங்களான கேது மற்றும் ராகு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ராசி பரிவர்த்தனை செய்கின்றன. அக்டோபர் 30, 2023 அன்று மாலை 14:13 மணிக்கு, சுக்கிரனின் துலாம் ராசியிலிருந்து வெளியேறி, புதனுக்குச் சொந்தமான கன்னிக்கு மாறுகிறார் கேது.
2023 ஆம் ஆண்டில் நடைபெறும் கேது பெயர்ச்சியின் கணிப்புகள் மற்றும் சில பயனுள்ள பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஜாதகத்தில் கேதுவின் அசுப பலன்களைத் தவிர்க்க நீல நிற ஆடைகளையும், கேது தோஷம் நீங்க இளஞ்சிவப்பு நிற ஆடைகளையும் அணிய வேண்டும்.
கேதுவின் அசுப ஸ்தானத்தால் கஷ்டப்படுபவர்கள் கேதுவின் பீஜ மந்திரமான 'ஓம் ஸ்த்ரௌன் ஸ்த்ரௌன் சஹ கேதவே நமஹ' மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இது துன்பங்களிலிருந்து விடுபட உதவுகிறது.
கேதுவின் தோஷங்களில் இருந்து விடுபட, கேது சம்பந்தமான எள், போர்வை, வாழைப்பழம் போன்றவற்றை தானம் செய்வதால் பிரச்சனைகள் நீங்கும்.
ஜாதகத்தில் கேதுவின் தோஷம் இருந்தால், பச்சை நிறக் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும் . இதனால் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி அசுப பலன்கள் விலகும்.
நெற்றியிலும் கழுத்திலும் மஞ்சள் திலகம் வைக்கவும், ஆடை தானம் செய்வது நல்லது
பறவைகளுக்கு தினமும் தானியங்களை உணவாக அளிக்கவும்.
தேவையற்ற சிக்கல்களையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க சிவ தரிசனம் செய்வது நல்லது
விலங்குகளுக்கு உணவிடவும், முடிந்தால் நாய்களுக்கு தேவையானவற்றை கொடுக்கவும்
பணம் வைக்கும் இடத்தில் வெள்ளிப் பொருள் ஒன்றை வைப்பது, பணவரத்தில் ஏற்படும் தடைகளை நீக்கும்
தங்கத்தால் ஆன நகைகளை அணியுங்கள்.
தானங்கள் செய்வது நல்லது
சிவ வழிபாடும், பிரதோஷ விரதமும் நன்மை பயக்கும்