மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்களை காட்டிலும் டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி சிறப்பான பலன்களை தருவதால் இந்த பாலிசியை எடுக்கும் முன் நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பதில் பல ரைடர்கள் உள்ளது, ஒவ்வொரு ரைடர்களும் உங்களுக்கு ஒவ்வொரு விதமான பாதுகாப்புகளை வழங்குவதால் நீங்கள் புத்திசாலித்தனமாக ரைடர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
உடல் ரீதியாக நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ எந்தளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற உண்மையை நீங்கள் பாலிசி எடுக்கும்போது தெரிவிக்க வேண்டியது அவசியம்.
நீண்ட காலமாக சந்தையில் இருக்கும் மற்றும் நல்ல க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதத்தைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஒவ்வொரு பாலிசிதாரரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நாமினிக்கு பாலிசியின் காலம் மற்றும் பாலிசி ஆவணங்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
இளம் வயதில் பிரீமியம் குறைவாக இருப்பதால் நீங்கள் சம்பாதிக்க தொடங்கிய பிறகு உங்களால் முடிந்த வரை அதிகபட்ச லைஃப் கவரை எடுத்துக்கொள்ளலாம்.