Guru Peyarchi 2023: சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி, தேவகுரு பிருஹஸ்பதி மீனத்தை விட்டு மேஷத்தில் பெயர்ச்சியாக உள்ளார். அதிகாலை 04.42 மணிக்கு குரு பகவான் மீனத்தில் இருந்து மேஷ ராசியில் நுழைகிறார். மே 1 வரை 2024 வரை அவர் இந்த ராசியில் இருப்பார்.
குரு மேஷ ராசியில் நுழையும்போது மேஷ ராசியில் சூரியன், புதன், ராகு ஆகிய கிரகங்களும் அங்கு இருக்கும்ம். இதனால் மேஷ ராசியில் சதுர்கிரஹி யோகம், ராகுவுடன் குரு சேர்வதால் சண்டல யோகம் ஆகியவை உண்டாகும்.
இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு குருவின் பெயர்ச்சியும் அதனால் உண்டாகும் யோகங்களும் மிகவும் சுபமாக கருதபடுகின்றன. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த நேரம் அலுவலக பணியில் இருப்பவர்க்ளுக்கு நல்லதாக கருதப்படுகின்றது. உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளும் திறக்கப்படும். போட்டித் தேர்வுகளில் தற்போது நல்ல வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவீர்கள்.
ஏப்ரல் மாதத்தில் குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளித் தரும். இது சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது நல்ல நேரம். உங்கள் மனம் ஆன்மீகப் பணிகளில் ஈடுபடும்.
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் துர்கை அம்மனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் தற்போது மீண்டும் கிடைக்கும். இதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு மற்றும் நிலத்தில் முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக இது இருக்கும். வியாபாரிகள் லாபம் பெறலாம். உங்களின் தைரியமும், பலமும் கூடும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை