Gold Investment: தங்கத்தில் முதலீடு செய்ய டாப் 5 வழிகள் இதோ

5 Best Way to Invest in Gold: தங்கம் அனைத்து காலங்களிலும் மக்களின் முதலீட்டிற்கான பிரபலமான வழியாக இருந்து வருகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஆண்டுதோறும் நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள். பொருளாதாரம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது, தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது.

 

கடந்த சில ஆண்டுகளில், தங்கத்தை அப்படியே வாங்குவதற்கு பதிலாக, தங்கத்தில் முதலீடு செய்வதற்கான இன்னும் பல வழிகளும் பிரபலமாகிவிட்டன. இதன் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு பாதுகாப்பான விருப்பமாக உருவெடுத்துள்ளது. ஃபிசிக்கல் தங்கத்திற்கு பல மாற்று வழிகள் உள்ளன. இந்த வழிகளில் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான தொந்தரவும் இருக்காது, திருட்டு பயமும் இருக்காது. இவற்றில் இன்னும் அதிக நன்மைகளும் கிடைக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் இந்த காலத்தில், தங்கத்தை வாங்கி முதலீடு செய்வதற்கான 5 சிறந்த விருப்பங்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

 

1 /5

ஆவண தங்கத்தில் முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த வழி,  தங்க ஈ.டி.எஃப் ஆகும். ஒரு தங்க ஈ.டி.எஃப் யூனிட் என்றால் 1 கிராம் தங்கம் என்று பொருள். இந்த தங்கம் 100 சதவீதம் தூய்மையான தங்கமாகும். தங்க ஈ.டி.எஃப்-ஐ மற்ற பங்குகளைப் போலவே பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் வாங்கி விற்கலாம். இதில் SIP மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. (reuters)

2 /5

தங்கப் பத்திரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. அவற்றின் மிகவும் தனித்துவமான தரம் என்னவென்றால், தங்கத்தின் விலைகள் அதிகரிப்பதைத் தவிர, இவற்றில் நீங்கள் 2.5 சதவீதத்தில் கூடுதல் வட்டியையும் பெறுவீர்கள். மெச்யூரிட்டிக்கு பிறகு தங்க பத்திரங்களில் வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. (representative image)

3 /5

ஆன்லைன் தளம் மூலம் தங்கத்தில் முதலீடு செய்ய டிஜிட்டல் தங்கம் ஒரு சிறந்த வழியாகும். இதை ஃபிசிக்கல் தங்கமாக மீட்டெடுக்கலாம் அல்லது விற்பனையாளருக்கு மறுவிற்பனையும் செய்யலாம்.

4 /5

இவை தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும். தங்க நிதி என்பது முதலீட்டிற்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான வழியாகும். இதில் வருமானமும் சிறப்பாக வருகிறது. (reuters)  

5 /5

நாம் பொதுவாக கடைகளில் இருந்து வாங்கும் தங்கம் ஃபிசிக்கல் தங்கம் எனப்படும். இருப்பினும், இதன் பராமரிப்பில் அதிக கவனம் தேவைப்படுகின்றது. சில சமயங்களில் நாம் இதற்கு பதிலாக பணம் பெற செல்லும் போது, அப்போதைய மதிப்பை விடக் குறைவாகவே கிடைக்கிறது. இருப்பினும், பலருக்கு இன்னும் தங்கத்தை இந்த வடிவில் வாங்கவே விருப்பம் இருக்கிறது.