நடைபயிற்சி செய்வது உடல் செயல்பாட்டுக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் நடைபயிற்சி பல நன்மைகளை தருகிறது.
தினசரி நடைப்பயிற்சி செய்வது கொழுப்பை குறைத்து இதயம் தொடர்பான நோய்களை குறைக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
தினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் இனிப்பு மீதான ஆர்வம் குறையும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதிகமாக சாக்லேட் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் தினமும் நடக்க வேண்டும்.
நடைப்பயிற்சி செய்வது மார்பக புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக அதிக உடல் எடை கொண்ட பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது இந்த பிரச்சனை வராமல் தடுக்கும்.
தினமும் நடப்பதன் மூலம் மூட்டு வலியை சரி செய்ய முடியும். 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மூட்டுவலி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும்.
முழங்கால்கள் மற்றும் இடுப்பு வலி உள்ளவர்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இந்த வலிகளை போக்க உதவும்.
நடைபயிற்சி செய்வது உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் நன்றாக வேர்க்கும் அளவிற்கு நடைபயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும்.