காலையில் காபியை தவிர்த்துவிட்டு டீ குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

Coffee vs Tea: டீயில் எல்-தியானைன் எனப்படும் அமினோ அமிலம் உள்ளது, இது காஃபினின் தூண்டுதல் விளைவுகளை சமநிலைப்படுத்துகிறது. 

 

1 /5

காலையில் எழுந்ததும் காபி குடித்தால் நாள் முழுவதும் தேவையான ஆற்றலைக் வழங்குகிறது. இருப்பினும் காபியை விட டீ குடிப்பது உடலுக்கு நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?   

2 /5

காபிக்கு பதில் காலையில் டீ குடிப்பது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.  காபி மற்றும் டீ இரண்டுமே நன்மைகளை அளிக்கும் என்றாலும், டீ சிறந்த தேர்வாக இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.  

3 /5

காபி உடலுக்கு ஆற்றலை தந்தாலும், மிதமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் தீங்கு விளைவிக்கும். டீயில் உள்ள காஃபின் உள்ளடக்கம் காபியை விட குறைவாக உள்ளது.  

4 /5

அதிக காஃபின் உள்ளடக்கம் ஆற்றல் அளிக்கும் அதே வேளையில், அதிக நடுக்கம், பதட்டம் மற்றும் தூக்க முறைகளை சீர்குலைக்கும். டீ இந்த பக்க விளைவுகளின் ஆபத்தை குறைக்கிறது.  

5 /5

காபியை அதிகம் குடித்தால் நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  மறுபுறம், டீ நீரேற்றத்திற்கு உதவுகிறது. காலையில் நீரேற்றமாக இருப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது.