10 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சியில் புனருத்தாரணம் பெற்ற புராதன ஆலயங்கள்!

Temples Transformation: 2014 முதல் இந்தியாவின் பிரதமராக பதவியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அயோத்தி மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் உள்ள பல பழமையான கோவில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளன 

இந்தியாவில் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் புத்துயிர் பெற்ற கோயில்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

1 /7

அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோவில் ஜனவரி 22 திங்கள்கிழமை திறக்கப்பட்டது. ஏறக்குறைய 500 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஸ்ரீராமரை அவரது பிறந்த இடத்தில், அயோத்தியாவின் பிரம்மாண்டமான கோவிலில் நிறுவபட்டது. ராமர் கோவில் கட்டப்பட்டதன் மூலம் அயோத்தியின் முகமே மாறிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தனது 11 நாள் கடினமான சடங்குகளை முடித்துக்கொண்டு ராமர் கோவிலை திறந்துவைத்தார்

2 /7

2014 முதல் பத்தாண்டுகளாக தொடர்ந்து பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடியின் ஆட்சியில் அயோத்தி மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் உள்ள பல பழமையான கோவில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளன. நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் புத்துயிர் பெற்ற கோயில்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில், அயோத்தி முதல் உஜ்ஜைனி வரை, காசி முதல் கேதார்நாத் வரை குறைந்தது 10 பழமையான கோவில்கள் சீர் செய்யப்பட்டுள்ளன.

3 /7

சரயு நதியின் கரையில் அமைந்துள்ள அயோத்தி நகரத்தில் இந்துக்களின் முக்கிய கடவுள் ராமர் பிறந்தார் என்பது நம்பிக்கை. முகலாயர்களின் ஆட்சியில் 1528 ஆம் ஆண்டில், மிர் பாக்கி என்பவர், இந்துக்கள் பல நூற்றாண்டுகளாக ராமரை வழிபட்ட கோயிலை அழித்தார். அதே இடத்தில் கோயிலின் இடிபாடுகளை கொண்டு ஒரு மசூதியைக் கட்டினார். அதற்கு பாபர் மசூதி என்று  பெயர். 496 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய இடத்திற்கு ராமர் இடம் பெயர்ந்துள்ளார்

4 /7

பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜம்மு காஷ்மீரிலும் பல கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில், காஷ்மீரின் சீதலாநாத் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன. காஷ்மீரில், ஸ்ரீநகரின் ரகுநாத் கோயில், அனந்த்நாக் மார்டண்ட் கோயில், படான் கௌரிசங்கர் கோயில் மற்றும் ஸ்ரீநகரின் பாண்ட்ரேதன் கோயில் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல, அவந்திபோராவின் அவந்தீஸ்வர கோவிலும் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

5 /7

2021 ஆம் ஆண்டில், சோம்நாத் கோவிலில் 3 பெரிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாதா பார்வதி கோவில் திறப்பு விழா, தரிசன பாதை மற்றும் கண்காட்சி மையம் ஆகியவை இதில் அடங்கும். 2014 ஆம் ஆண்டில், மோடி அரசாங்கம் முதல்முறையாக அமைந்தபோது, ​​அவர்கள் கேதார்நாத் கோயில் புனரமைப்புத் திட்டத்தைத் தொடங்கினர், 5 நவம்பர் 2021 அன்று, கேதார்நாத் தாழ்வாரத்தையும் ஆதி சங்கராச்சாரியார் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

6 /7

அக்டோபர் 11, 2022 அன்று, உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் சுமார் 946 மீட்டர் நீளமுள்ள ஸ்ரீ மஹாகால் லோக் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

7 /7

2014ஆம் ஆண்டு, வாரணாசித் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மோடி, காசி விஸ்வநாத் வழித்தடத்தை அமைக்க திட்டமிட்டார். 2019ல், 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டினார். சரியாக 2 ஆண்டுகள் 8 மாதங்கள் கழித்து, 13 டிசம்பர் 2021 அன்று, 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் காசி விஸ்வநாத் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்