World's most Sacred mountains: உலகின் மிக புனிதமான 5 மலைகள்

World's most Sacred mountains: உலகில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல மலைகள் உள்ளன. இந்த மலைகளின் இந்த சிகரங்கள் யாத்திரை மையங்களாக பிரபலமாக உள்ளன. அவற்றில் முக்கியமான மிக முக்கியமான ஐந்து மலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /5

கைலாச மலை ஆன்மீக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் மனிதர்களால் அடைய முடியாததாக உள்ளது. இந்து மதம் மற்றும் புத்த மதத்தின் நம்பிக்கைகளின்படி, கைலாச மலை மேரு மலையின் உருவகமாகும். பழங்கால குகைகள் மற்றும் மடங்கள் இங்கு உள்ளன என்று நம்பப்படுகிறது. கைலாச மலை இந்து மதத்தில் சிவபெருமானின் இருப்பிடமாக கருதப்படுகிறது.

2 /5

இந்த மலை எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் உள்ளது. சினாய் மலை 2285 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யாத்ரீகர்கள்  வருகிறார்கள். இங்கு தான் இஸ்ரேலியர்களுக்கு கடவுள் விதிகள் வகுத்தார் என்று நம்பப்படுகிறது.

3 /5

இது இந்தியாவின் இரண்டாவது உயரமான மலை. உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்த மலை சிகரம் ஆன்மீக  முக்கியத்துவம் வாய்ந்ததோடு, சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெயர் பெற்றது. இந்த மலையை, 1988 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. 

4 /5

பாலி மக்களுக்கு அகுங் மலை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. இது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இது கிழக்கு பாலியில் 10308 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் எரிமலையும் உள்ளது.

5 /5

புஜி மலை 3776 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஜப்பானில் உள்ள இந்த புனித மலை, பௌத்தம் மற்றும் ஷின்டோயிசம் (Shintoism) இரண்டிலும் புனிதமாகக் கருதப்படுகிறது. மவுண்ட் புஜியிலும் எரிமலை உள்ளது. இது அக்னி தேவதை வாசம் செய்யும் இடமாகவும் கருதப்படுகிறது.