கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், எப்போது முடியும் தேர்தல் பரபரப்பு? என பரப்புரைகளால் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
"மோடி என்றால் விஷப்பாம்பு" என்று காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு பதிலளித்த பாஜகவின் முதலமைச்சர் பொம்மை, காங்கிரசுக்கு இன்னும் அதிகார போதை தெளியவில்லை, பேசிப்பேசியே இந்த நிலைக்கு வந்துவிட்டார்கள் பாவம் என்று கிண்டல் அடித்தார்.
மேலும் படிக்க | ஜெகதீஷ் ஷெட்டரை மண்ணை கவ்வ வைக்க பாஜக திட்டம்! அமித் ஷா மீது புகரளித்த காங்கிரஸ்
துரோகிகளுக்கு மோடி சிம்ம சொப்பனம். பிரதமர் குறித்த வார்த்தைகள் காங்கிரஸின் கலாச்சாரத்தை காட்டுவதாக முதல்வர் பொம்மை கூறினார்
தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டு கொள்ளவில்லை? என பாஜகவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது
தேர்தல் வாக்குறுதிகளை மூன்று பிரதான கட்சிகளும் பெரிய அளவில் வெளியிட்டுள்ளன
சீனியரான கார்கே, பிரதமரை விஷப்பாம்பு என பேசியது வருத்தம் அளிக்கிறது என்று முதல்வர் பொம்மை கூறினார்.
பிரதமர் குறித்த கார்கேயின் வார்த்தைகள் காங்கிரஸின் கலாச்சாரத்தை காட்டுவதாக முதல்வர் பொம்மை கூறினார்.
கர்நாடக மாநிலத்தின் நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்சிகள் பிரச்சாரம் செய்வதாக, அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றன