Uric Acid Control Green Leaf Veg: யூரிக் ஆமிலத்தைக் கட்டுப்படுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் இந்தக் கீரையை பயன்படுத்தினால் போதும்! ஜூஸாக குடித்தாலும் பலன் தரும் பதுவா...
பியூரின் அளவு மிகவும் குறைவாக உள்ள கீரைகளில் பதுவா கீரையும் ஒன்று. நார்ச்சத்துகள் கொண்ட ஊட்டச்சத்துக் கீரை பதுவா. யூரிக் அமிலத்தை குறைக்க கடுகுக் கீரையைப் போல திறமையாக செயலாற்றும் கீரை பதுவா..
உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமானது ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள். உணவே உடலுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருவதுபோல, அதுவே நோயையும் பிரச்சனைகளையும் தருகிறது
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளின் பட்டியலில் கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், பதுவா கீரை குளிர்காலக் கீரையாக இருந்தாலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது
ப்யூரின் குறைவாக உள்ளதால், பதுவா கீரையை பயன்படுத்தும்போது மூட்டுகளில், யூரிக் அமில படிகங்கள் படிவது குறையும். இதனால் மூட்டுகள் வலுவாகும்
உடலில் யூரிம் அமில சுரப்பு குறைந்தால், ரத்தம் சுத்தீகரிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படும்
உடலில் உருவாகும் யூரிக் அமிலத்தைக் குறைக்க பதுவா ஜூஸ் (Bathua Juice Reduce Uric Acid) சிறந்தது. இது செரிமான சக்தியை பலப்படுத்தி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும்
கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற பல சத்துக்கள் பதுவா கீரையில் காணப்படுகின்றன, இவை உடலுக்கு மிகவும் முக்கியமானவை
பதுவா கீரையின் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், யூரிக் அமிலப் பிரச்சனை இருந்தால் அது விரைவில் நீங்கும்.