ஜூலை மாத சுக்கிரன் பெயர்ச்சியால் மனதில் கவலைகள் அதிகரிக்கும்! எச்சரிக்கை அவசியம்!

Venus Transit July 2024 : காதல், படைப்பாற்றல், சுகபோகம், ஆடம்பரமான வாழ்க்கைக்குக் காரணகர்த்தாவாக இருக்கும் சுக்கிரன்  ஜூலை 7, 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். 

கடக ராசியில் சுமார் ஒரு மாத காலம் இருக்கும் சுக்கிரன், அதன் பிறகு ஜூலை 31 (புதன்கிழமை) அன்று சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைவார். எனவே ஜூலை மாதம் பலரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

1 /8

ஜோதிட சாஸ்திரத்தில் பிறரை ஈர்க்கும் கவர்ச்சியையும், வசதியான வாழ்க்கையையும் சுகபோகங்களையும் கொடுப்பவர் சுக்கிரன். உலக இன்பம், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு, பண வரவு, அழகு, அன்பு ஆகியவற்றைக் கொடுக்கும் சுக்கிரன் சுமார் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.

2 /8

சுக்கிரனின் சுபத்துவத்தினால் நன்மைகள் நடந்தால், அவர் ஒருவரின் ஜாதகத்தில் மோசமான இடத்தில் அமர்ந்தாலோ அல்லது அசுப கிரகங்களுடன் இணைந்தாலோ எதிர்மறையாய் வேலை செய்வார்

3 /8

சுக்கிரன் வலுவானால் பிரபலத்தன்மையைக் கொடுப்பவர் என்றால், அந்த ஜாதகத்தில் மோசமான நிலை இருந்தால், பிரமலமாவது என்பது மோசமானதாக அதாவது எதிர்மறையானதாக இருக்கும். அய்யோ பாவம் இவ்வளவு கஷ்டப்பட்டவர் உண்டா என உலகமே பார்த்து பாவப்படும் அளவுக்கு கவலைகளை உண்டாக்கும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்

4 /8

மாதமொரு முறை பெயர்ச்சியடையும் சுக்கிரன், ஜூலை மாதத்தில் இரு முறை பெயர்ச்சியாகிறார்

5 /8

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு ஜூலை ஏழாம் நாள் பெயர்ச்சியான பிறகு, மாதக் கடைசியில் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுவார் சுக்கிரன்

6 /8

சிம்மத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி அருமையாக இருக்கும். பண வரவு அதிகம் ஆக இருப்பதால் பொருளாதார நிலை மேம்படும்.  அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

7 /8

சுக்கிரன் பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும். கடக ராசிக்கு இந்த காலத்தில் பண வரவு அமோகமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். பேச்சாற்றல் பல நன்மைகளைக் கொடுக்கும்

8 /8

துலாம் ராசிக்கு, சுக்கிரன் பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் வேலைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சமூகத்தின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்