Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு உடல் பருமன் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிக எடை உடலில் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
Weight Loss Tips: பல நேரங்களில் மக்கள் உடல் எடையை குறைக்க ஜிம்மில் பல மணிநேரம் செலவிடுகிறார்கள். கடினமான உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், என்ன செய்தாலும், சிலரால் தங்கள் எடையை குறைக்க முடிவதில்லை. உடல் எடையை குறைக்க, நாம் பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், எதை எல்லாம் செய்யக்கூடடாது என்பது பற்றியும் புரிதல் இருக்க வேண்டியது அவசியமாகும்.
வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்ந்தால் (Belly Fat) அது ஒரு நபரின் ஒட்டுமொத்த தோற்றத்தை கெடுத்து தன்னம்பிக்கையை குலைத்து விடுகிறது. இது மட்டுமின்றி உடல் பருமன் பல கடுமையான நோய்களின் அபாயத்தையும் உருவாக்குகிறது.
உடல் எடையை குறைக்க, நாம் பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், எதை எல்லாம் செய்யக்கூடடாது என்பது பற்றியும் புரிதல் இருக்க வேண்டியது அவசியமாகும். ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் நாம் செய்யும் சில தவறுகள் நாம் செய்யும் அனைத்து முயற்சிகளையும் வீணாக்கி விடுகின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க (Weight Loss) நினைப்பவர்கள் கார்போஹைட்ரேட்டை வில்லனாகப் பார்க்கிறோம். இந்தச் சத்துகளைத் தவிர்த்தால் உடல் எடை விரைவில் குறையும் என்று நினைக்கிறோம். இதன் காரணமாக வீட்டில் சமைத்த சாதம், இட்லி, உப்மா, போஹா போன்றவற்றைச் சாப்பிடாமல் இருக்கத் தொடங்குகிறோம். ஆனால் இப்படி செய்வது மிகப்பரிய தவறாகும். உங்கள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாக நீக்கினால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கான ஆற்றலை உங்களால் பெற முடியாது. இது சோர்வு மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும்.
பலர் தங்கள் உடல் மற்றும் அழகு பற்றி நேர்மறையாக சிந்திப்பதில்லை. அவர்கள் உடல் எடையை குறைக்க நீண்ட நேரம் பசியுடன் இருக்கிறார்கள். ஆனால், சிறிது நேரம் கழித்து அதிக பசி எடுப்பதால், வழக்கமாக உட்கொள்வதை விட அதிக உணவை உட்கொள்கிறார்கள். இப்படி செய்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
உடல் எடையை குறைக்க அதிக உடற்பயிற்சிகள் தேவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிறிதும் யோசிக்காமல் உடற்பயிற்சி செய்வது எந்த பலனையும் தராது. ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான அளவு தூக்கம் இருந்தால் மட்டுமே உடற்பயிற்சியின் பலன் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க நினைபவர்கள், ஆரோக்கியமான வழியில் அதை செய்ய, உணவுக் கட்டுப்பாட்டிற்குப் பதிலாக, போதுமான அளவு ஆரோக்கியமான, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ளலாம்.
இது தவிர தேவையான அளவு உடற்பயிற்சியும் போதுமான உடல் செயல்பாடும் மிக முக்கியமாகும். இதுமட்டுமின்றி நேர்மறை எண்ணமும் முக்கியமானது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.