குரு ஆட்டம் இன்னும் வெறும் 75 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை, பணம், அதிர்ஷ்டம்

தற்போது, சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் ​​குரு அமர்ந்து பயணித்து வருகிறது. இவர் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ் ஆகியவற்றைத் தரக்கூடியவராகக் கருதப்படுகின்றார். 

கிரகங்களின் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான் வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன்பு அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப்போகிறது. அதேபோல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் இன்னும் சில நாட்களில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நகரப் போகிறார். இதனிடையே குரு வக்ர பெயர்ச்சி சில ராசிகளின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படும். குருபகவான் அதிசாரம், வக்ரம் அடையும் போது ராசிகளுக்கு சில பலன்களைத் தருவார்.

 

1 /8

குரு பார்க்கக் கோடி நன்மை என்பது ஜோதிட மொழி. பூரண சுபரான குருபகவான் ஒரு மனிதனின் வாழ்வை வளமாக்குபவர். அவர், வக்ர கதியில் பெயர்ச்சி அடையும் போது குறிப்பிட்ட பலன்களைத் தருவார். அது சிலருக்குச் சாதகமாகவும் சில ராசியினருக்குப் (Zodiac Sign) பாதகமாகவும் அமையலாம்.  

2 /8

வேத ஜோதிடத்தின்படி, குரு கிரகம் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 10:01 மணிக்கு ரிஷப ராசியில் வக்கர நிலையில் பயணிகப் போகிறது, பின்னர் பிப்ரவரி 4ஆம் தேதி 2025 மதியம் 1:46 மணி வரை இதே நிலையில் தான் பயணிப்பார் குரு.  

3 /8

ரிஷபம்: சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியில் குரு வக்ர பெயர்ச்சி நடக்க போவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல்வேறு பொறுப்புகள் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் உண்டாகும். வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை எதிர்க்கொள்வீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுப்படுவீர்கள்.  

4 /8

மிதுனம்: குரு வக்ர பெயர்ச்சி மிதுன ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் நடக்கப் போகிறது. இதனால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல காலம்  தொடங்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் மரியாதை கூடும். புதிய வழியில் வருமானம் வந்து குவியும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள், கூடுதலாக தீபாவளி போனஸை பெறுவீர்கள்.  

5 /8

துலாம்: குரு வக்ர பெயர்ச்சி துலாம் ராசியின் எட்டாவது வீட்டில்இருந்து நகரப் போகிறார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக பலன் கிடைக்கும். தொழிலில் இருந்து பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலை மற்றும் வியாபாரத்தில் பெரிய அளவில் விரிவாக்கம் ஏற்படும். முதலீடு மூலம் லாபம் பெறலாம்.  

6 /8

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு இரண்டாவது மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார் மேலும் இந்த ராசியின் ஏழாவது வீட்டில் குரு வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் முன்னேற்றம் அடையும்.  

7 /8

குரு பகவானின் அருள் நிரந்தரமாக பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;  குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ'  என்ற ஸ்லோகத்தை தினமும் உச்சரிக்கவும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.