செயற்கை இனிப்பு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்! ஆனா புற்றுநோய்? ஆமாவா இல்லையா?

Artificial Sweeteners: செயற்கை இனிப்புகள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்றும், குளிர் பானங்கள், சூயிங்கம் அல்லது டீ-காபியில் சேர்க்கப்படும் மாத்திரைகளில் அஸ்பார்டேம் அதிக அளவில் உள்ளது, இது புற்றுநோயை உண்டாக்கும் என்று முன்பு கூறப்பட்டது.

செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானதா இல்லையா என்ற சுகாதார பிரச்சனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு (WHO) செயற்கை இனிப்புகள் மற்றும் அஸ்பார்டேம் தொடர்பான இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. WHO இன் அறிக்கையில், புற்றுநோய்க்கு காரணம் என்று அஸ்பார்டேம் குறிப்பிடப்படவே இல்லை. இதன் பின்னணி என்ன?  

1 /7

அஸ்பார்டேம் இனிப்பானைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலின் பல பாகங்களில் சுமார் 92 வகையான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சில சர்வதேச ஆய்வுகளில் தெரியவந்துள்ளது   

2 /7

தற்போது, அஸ்பார்டேம் இனிப்பான் தொடர்பாக, இரண்டு வெவ்வேறு அமைப்புகளுடன் இணைந்து WHO நடத்திய செயற்கை இனிப்புகள் தொடர்பான ஆய்வு இது

3 /7

செயற்கை இனிப்பு, புற்றுநோயை ஏற்படுத்துமா என்பது குறித்து உறுதியான ஆதாரங்களி இல்லை. இருப்பினும், தினமும் ஒரு கிலோ உடல் எடையில் 40 மில்லிகிராம் என்ற விகிதத்தில் அஸ்பார்டேமை எடுத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

4 /7

அஸ்பார்டேம் ஒரு இரசாயன இனிப்பு ஆகும், இது 1980 களில் இருந்து உணவு பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

5 /7

சர்க்கரை இல்லாத சூயிங் கம் முதல் ஐஸ்கிரீம், இருமல் சிரப், சர்க்கரை இல்லாத பற்பசை என அனைத்திலும் அஸ்பார்டேம் பயன்படுத்தப்படுகிறது.

6 /7

உலகில் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 6 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் உள்ளது. செயற்கை இனிப்பானான அஸ்பார்டேம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தீங்கு குறித்தும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது, ஆனால் அதை உறுதியாக நிரூபிக்க இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கூட, புற்றுநோய்க்கான காரணம் என்று நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

7 /7

புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) முதல் முறையாக WHO உடன் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது, அதே நேரத்தில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உணவு சேர்க்கைகளுக்கான கூட்டு நிபுணர் குழு (JECFA) மூன்றாவது முறையாக அஸ்பார்டேம் பற்றி ஆய்வு செய்துள்ளது