Aadi Velli Mavilaku: ஆடி மாதத்தில் சிவனை விட சக்திக்கு அதிக சக்தி இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம், அதனால் தான் ஆடியில் அன்னைக்கு வழிபாடுகள் அதிகளவில் செய்யப்படுகிறது
மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று. மாவிளக்கு போடுவதற்கான காரணங்களையும், அதன் மகத்துவத்தையும் தெரிந்துக் கொள்வோம்...
ஆடி வெள்ளி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிட்டால் செல்வம் பெருகும், காரிய சித்தி உண்டாகும். அம்மனை எப்படி ஆராதித்தாலும் அருள் புரிவாள் என்றாலும், மாவிளக்கு போட்டு வழிபட்டால் மனம் மகிழ்வாள்
அம்மனை வழிபடும்போது மா அதாவது அரிசி மாவிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல், மாவில் விளக்கு செய்து மாவிளக்கு ஏற்றுதல் என அரிசி மாவுக்கான முக்கியத்துவம் அதிகமாக உள்ளது
நோய்கள் தீரவும், நோய்ப் பிணி அண்டாமல் இருக்கவும் மாரியம்மன், காளி என பார்வதி தேவியின் அம்சங்களுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது நல்லது
கோவில்களிலும் வீடுகளிலும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி கோரிக்கைகளை அம்மனிடம் வைத்தால், அன்னை சக்தி சகல செல்வங்களையும் தந்து ரட்சிக்கிறார்
மாவிளக்கில் விடப்படும் நெய்யில் அக்னி பகவானின் சக்தி அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நமது வீடுகளில் குடியேற வேண்டும் என்பதற்காகவே மாவிளக்கு வழிபாடு உருவானது
அம்மனை வீடுகளில் குடியேற்றுவது என்பது மங்களத்தைத் தரும். மாவிளக்கு ஏற்றுவது என்பது அன்னை சக்தியை வீட்டிற்கு அழைத்து, அவரை குடியேற்றுவதற்கான வழிமுறை ஆகும்
பச்சரிசியை மாவாக இடித்து, சலித்துக் கொண்டு அந்த மாவில் வெல்லம், ஏலக்காய் நெய் சேர்த்து விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்
அரிசி அன்னம், உயிர்வாழ அடிப்படையான அன்னத்தில் இனிமையான வெல்லத்தையும் மணம் தரும் ஏலக்காயையும் சேர்த்து நெய்யில் இருக்கும் அக்னி பகவானை அதில் சேர்த்து அன்னையை வழிபடுவது சகல செளபாக்கியங்களையும் தரும்