அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருக்கும் அட்லீ! ஸ்க்ரிப்ட் ரெடி..அண்ணன் ரெடியா?

Atlee about Ajith Kumar: ஜவான் பட இயக்குநர் அட்லீ, அஜித்திற்காக ஒரு கதையை ரெடியாக வைத்திருப்பதாக கூறியுள்ளார். 

1 /7

தமிழ் திரையுலகில், வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குநராக திகழ்பவர், அட்லீ. 

2 /7

விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அட்லீ மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். 

3 /7

சமீபத்தில் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கியிருந்த ஜவான் படம் வெளியானது. இப்படத்தில் விஜய் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. 

4 /7

ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து தான் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான கதையை ரெடி செய்து கொண்டிருப்பதாகவும் அட்லீ கூறினார். 

5 /7

அட்லீ, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், தான் அஜித்தை முதன்முதலாக சந்தித்த தருணங்களை பகிர்ந்து கொண்டார். 

6 /7

தனக்கு, அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை இருப்பதாகவும் அவருக்காக மாஸ் கதையை ஏற்கனவே உருவாக்கி விட்டதாகவும் அட்லீ கூறியிருக்கிறார். 

7 /7

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியிருந்த ஜவான் படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் கலெக்ட் செய்தது.