நெஞ்சுக்குள்ள, அக நக போன்ற பாடல்களை பாடி பிரபலமான பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலனை, 'தி டெஸ்ட்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் 'தி டெஸ்ட்' படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகிறார்.
'தி டெஸ்ட்' படத்தில் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலனை இசையமைப்பாளராக, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தி இருக்கிறார். தமிழ் திரையுலகில் குறைந்த அளவிலேயே பெண் இசையமைப்பாளர்கள் இருந்து வருண் நிலையில் அந்த லிஸ்டில் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் சேர்ந்துள்ளார்.
தமிழில் கடல், மரியான், ராஜா ராணி, இரண்டாம் உலகம், மெட்ராஸ், காக்கி சட்டை, ஓ மணப்பெண்ணே போன்ற பல படங்களில் மனதை மயக்கும் பாடல்களை பாடி தனது வசீகரமான குரலால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன்.
சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் த்ரிஷா மற்றும் கார்த்தி இடம்பெறும் "அக நக அக நக முக நகையே" பாடலை பாடி பலரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறார்.
இதுவரை பாடகியாக அனைவரது மனதிலும் ஆட்சி செய்து வந்த சக்திஸ்ரீ கோபாலன், இனிமேல் இசையமைப்பாளராக புதிய அவதாரமெடுத்து அனைவரது இதயத்திலும் ஆட்சி செய்யப்போகிறார்.