தன்னம்பிக்கையும் தைரியமும் வளர வேண்டுமா? ‘இந்த’ புத்தகங்களை படிங்க..

Books That Will Help You To Gain Confidence: பலருக்கு புத்தகங்களை படித்து அந்த உலகிலேயே தொலைந்து போக மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட புத்தக பிரியர்களுக்கான பதிவு இது!

Books That Will Helps You To Build Self-Confidence: பலர், தங்களது தோற்றத்தினாலோ, அல்லது தன்னிடம் இல்லாத விஷயங்களை நினைத்தோ தன்னிடம் தைரியமே இல்லாதது போல உணர்வர். இதற்கு காரணம், அவர்களை சுற்றி இருப்பவர்களாக இருக்கலாம், அல்லது அவர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம். எதுவாக இருப்பினும், தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் உணர வைக்க சில புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றை படித்தால் கண்டிப்பாக வாழ்வில் ஏதேனும் நல்ல மாற்றம் கிடைக்கும். அவை என்னென்ன புத்தகங்கள்? இங்கு பார்ப்போம். 

1 /7

உண்மை உலகை விட்டு புத்தக உலகிற்குள் தொலைந்து அதற்குள்ளேயே பயணிக்க பலருக்கு பிடிக்கும். பிடித்த கதையை நாவல் புத்தகமாக படிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, தனக்கு தேவையான விஷயங்களை கற்றுத்தரும் புத்தகங்களை படிக்க ஒரு சிலருக்கு பிடிக்கும். அப்படி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் சில புத்தகங்கள் யாவை என்பதை பார்க்கலாமா? 

2 /7

யியர் ஆஃப் யெஸ் (Year Of Yes) புத்தகத்தை ஷாண்டா ரைம்ஸ் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் சமூக பதட்டத்தை களைவது எப்படி, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்திற்கும் ஆமாம் என்று தலையாட்டாமால் நோ சொல்லவும் கற்றுக்கொடுக்கிறது, இப்புத்தகம். இந்த புத்தகத்தை குறிப்பாக பல பெண்கள் வாங்கி படிக்கின்றனர். 

3 /7

கேர்ள் வாஷ் யுவர் ஃபேஸ் (Girl, Wash You Face) புத்தக தலைப்பின் தமிழாக்கம், ‘பெண்ணே முகத்தை கழுவு’ என்பதாகும். இந்த புத்தகத்தை ரேச்சல் ஹாலிஸ் என்பவர் எழுதியிருக்கிறார். இது, பெண்களுக்காக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் ஆகும். ஒருவருக்கு, தனக்குள் இருக்கும் பதற்றத்தையும் பயத்தையும் எப்படி தூக்கியெறிவது என இந்த புத்தகத்தில் டிப்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவர், தனக்கான நல்ல விஷயங்களை தேடி செல்கையில் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன மாதிரியான சத்தியங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இப்புத்தகம் கூறுகிறது. 

4 /7

தி சிக்ஸ் பில்லர்ஸ் ஆஃப் செல்ஃப் எஸ்டீம் (The Six Pillars Of Self-Esteem) புத்தகத்தை நத்தானியல் ப்ராண்டன் என்பவர் எழுதியிருக்கிறார். இப்புத்தகம், 1994ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. சுய மரியாதை என்றால் என்ன? சுய மரியாதை ஏன் முக்கியமானது? ஒருவருக்கு எந்த அளவிற்கு சுய மரியாதை இருக்க வேண்டும்? பிறர், நமது சுய மரியாதையில் எந்த மாதிரியான பங்கை வகிக்கின்றனர்? போன்ற கேள்விகளை மையமாக வைத்து இந்த புத்தகத்தில் அவற்றிற்கான விடை எழுதப்பட்டிருக்கிறது.

5 /7

தி ஹேப்பினஸ் ப்ராஜெக்ட் (The Happiness Project) புத்தகத்தை க்ரெட்ச்ஹென் ரூபின் என்பவர் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம் கிட்டத்தட்ட30 மொழிகளில் மொழிபெயர்ப்பு  செய்யப்பட்டுள்ளது. இதில், மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்? உடலை நன்றாக பார்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எழுதப்பட்டிருக்கிறது. 

6 /7

தி கான்ஃபிடன்ஸ் கோட் (The Confidence Code) புத்தகத்தை க்ளார் ஷிப்மேன் என்பவர் எழுதியிருக்கிறார். ஒருவர் தன்னம்பிக்கையோடு இருப்பது எப்படி? அதனை வளர்த்துக்கொள்வதனால் என்ன மாதிரியான மாற்றங்கள் வாழ்வில் ஏற்படும் போன்றவை இந்த புத்தகத்தில் அலசப்பட்டுள்ளன. 

7 /7

தி கிஃப்ட்ஸ் ஆஃப் இம்பெர்ஃபெக்‌ஷன் (The Gifts Of Imperfection) புத்தகத்தை ப்ரெனெ ப்ரவுன் என்பவர் எழுதியிருக்கிறார். பிறருடன் நம்மை ஒப்பிடுவதை எப்படி நிறுத்துவது, தன்னை கலை ரீதியாக உயர்த்திக்கொள்வது எப்படி போன்ற டிப்ஸ்களை அழகாக இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.