World's Costliest Fungus: கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சையை கொஞ்சம் விட்டுட்டு இத பாருங்க!!

கொரோனா தொற்றை ஒழிக்கவே இன்னும் ஒரு வழி கிடைக்காமல் மக்கள் அல்லாடும் வேளையில், தற்போது நாட்டில் மற்றொரு பீதி தொடங்கி விட்டது. அதுதான் மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய். இது மிகவும் ஆபத்தான் பூஞ்சை நோயாக கருதப்படுகின்றது. 

இந்த நோயைப் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இது மட்டுமல்ல, கருப்பு பூஞ்சைக்குப் பிறகு, இப்போது வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சைகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்த பூஞ்சைகளால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், மூலிகைகளாகப் பயன்படுத்தப்படும் சில பூஞ்சைகளும் உள்ளன. அவை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. இன்று, இந்த பதிவில் லட்சக்கணக்கான ரூபாயில் விற்கப்படும் ஒரு பூஞ்சையைப் பற்றி காணலாம். இது உலகின் மிக விலையுயர்ந்த பூஞ்சையாகும்.

 

1 /5

மலைகளில் காணப்படும் இந்த பூஞ்சையின் பெயர் கம்பளிப்பூச்சி பூஞ்சை (Caterpillar Fungus). தகவல்களின்படி, 1 கிலோ கம்பளிப்பூச்சி பூஞ்சையின் விலை சுமார் 20-30 லட்சம் ஆகும். இந்தியாவில், இது முழு பூஞ்சை, யர்ஷகும்பா அல்லது இமயமலை வியக்ரா என்று அழைக்கப்படுகிறது.  

2 /5

இந்த பூஞ்சை ஒரு குறிப்பிட்ட பூச்சி வகையைக் கொன்று அதன் மேல் வளர்கிறது. இதன் அறிவியல் பெயர் கார்டிசெப்ஸ் சினென்சிஸ் ஆகும். இந்த பூஞ்சைக்கு வெளிநாடுகளில் அதிக டிமாண்ட் உள்ளது. இது இந்தியாவைத் தவிர நேபாளத்திலும் சீனாவிலும் காணப்படுகிறது.

3 /5

இந்த பூன்சை நேபாளம் மற்றும் சீனாவின் பல பகுதிகளில், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒரு ஊடக அறிக்கையின்படி, இந்த பூஞ்சை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால் இது இங்கு ரகசியமாக விற்கப்படுகிறது.  

4 /5

சீனாவில், இந்த பூஞ்சை ஒரு பாலியல் தூண்டுதல் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, விளையாட்டு வீரர்கள் இதை ஸ்டீராய்டாக பயன்படுத்துகின்றனர். மக்கள் இதை தேநீர் மற்றும் சூப்பிலும் பயன்படுத்துகிறார்கள்.  

5 /5

இந்த பூஞ்சை கிடைப்பது வேகமாக குறைந்து வருகிறது. இந்த வகை பூஞ்சைகள் கிடைப்பது சுமார் 30 சதவீதம் குறைந்த பிறகு, சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு (IUCN) அதை 'சிவப்பு பட்டியலில்' சேர்த்துள்ளது.