பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பூசணி சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.

இந்த தொகுப்பில் வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்

1 /5

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண்  பார்வை சிறப்பாக இருக்கும்.

2 /5

உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.  

3 /5

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.   

4 /5

பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

5 /5

வெள்ளைப் பூசணியானது கட்டிகள் வளர்வதை தடுத்து நிறுத்தும் ஆன்டி-ஆஞ்சியோஜெனிக் (Anti-angiogenic) பண்புகளைக் கொண்டுள்ளது. வெள்ளைப் பூசணி சாறு புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன. எனவே, உங்கள் வழக்கமான உணவில் வெள்ளை பூசணி சேர்த்துக்கொள்வது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.