அதிசயம்... ஆனால் உண்மை; உலகின் ஒரே நிலத்தடி கிராமம்..!!

நிலத்தடி வீடுகள், ராணுவ பதுங்கு குழி போன்றவற்றை பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உலகில் நிலத்தடியில் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..... ஆனால் இது முற்றிலும் உண்மை. இந்த நிலத்தடி கிராமம் ஆஸ்திரேலியாவில் உள்ளது.

1 /5

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் கூபர் பேடி. உலகின் தனித்துவமான கிராமம் என்று சொல்லலாம். இங்கு 70 சதவீத மக்கள் நிலத்தடியில் வாழ்கின்றனர். அவர்களின் வீடு அல்லது அலுவலகம் மிகவும் ஆடம்பரமானது. பூமியில் இருந்து நூற்றுக்கணக்கான அடிக்கு கீழே உள்ள குடியிருப்பு உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

2 /5

இந்த நிலத்தடி வீடுகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளதாக உள்ளன.

3 /5

இங்கு வசிப்பவர்கள் இந்த நிலத்தடி கிராமத்தில் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களுடன் தங்கள் வணிக விற்பனை நிலையங்களையும் கட்டியுள்ளனர். நிலத்தடி கிராமத்தில், பூமிக்கு கீழே தேவாலயங்கள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், ஒரு பார் மற்றும் ஹோட்டல்களும் இந்த கிராமத்தில் உள்ளன.

4 /5

கூபர் பேடியில் சுரங்கப் பணி 1915 ஆம் ஆண்டு தொடங்கியது. உண்மையில், இது ஒரு பாலைவனப் பகுதி, இதன் காரணமாக கோடையில் வெப்பநிலை மிக அதிகமாகவும் குளிர்காலத்தில் தட்பநிலை மிகக் குறைவாகவும் இருக்கும். எனவே இங்கு வசிக்கும் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்பிரச்னையில் இருந்து விடுபட, சுரங்கம் தோண்டிய பின், காலியாக உள்ள சுரங்கங்களில் வசிக்க மக்கள் சென்றனர்.

5 /5

இங்கு பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்து வசதிகளுடன் கூடிய வசதிகள் கொண்டவை. இந்த ஊரில் சுமார் 1500 வீடுகள் உள்ளன, இதில் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  இங்கு கோடையில் ஏசியோ குளிர்காலத்தில் ஹீட்டரோ தேவையில்லை. நிலத்தடியில் இருப்பதால், இங்கு வெப்பநிலை எப்போதும் சீராக இருக்கும். பல ஹாலிவுட் படங்களும் இந்தப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன.