நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. நெல்லிக்காயில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது பல்வேறு நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
கண்பார்வையை அதிகரிக்க நெல்லிக்காய் மிகவும் சிறந்தது.
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சத்தையும், சக்தியும் கிடைக்கும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.