Maruti Suzuki Car Offers: மாருதி சுசுகி இந்த மாதம் (ஜூலை 2022) அதன் அரேனா ரேஞ்ச் மாடல்களில் ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. சலுகைகளில் ரொக்க தள்ளுபடி, பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். இந்த சலுகைகள் நிறுவனத்தின் ஆல்டோ, செலிரியோ, ஸ்விஃப்ட், வேகன் ஆர் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஹேட்ச்பேக்குகளில் கிடைக்கும். இருப்பினும், சிஎன்ஜி வகைக்கு எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. மேலும், எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் எம்பிவி-க்கு எந்த தள்ளுபடியும் இல்லை.
மாருதி சுஸுகி ஸ்விஃப்டில் ரூ.18,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. ஸ்விஃப்ட் அதன் சிக்கனமான இயந்திரம், ரைட் மற்றும் கையாளுதல் சமநிலைக்கு பெயர் பெற்றது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (90எச்பி) கிடைக்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி ஆல்டோ 800க்கு ரூ.23,000 வரை சலுகைகள் கிடைக்கும். ஆல்டோ 796சிசி இன்ஜினுடன் மட்டுமே வருகிறது.
மாருதி சுசுகி ஈக்கோ-வில் ரூ.20,000 வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன. மாருதி சுஸுகியின் மலிவு விலை எம்பிவி ஈகோ-வில் 1.2-லிட்டர் எஞ்சின் (73hp, 98Nm) யூனிட் கிடைக்கிறது. இதில் 5-சீட்டர், 7-சீட்டர் மற்றும் கார்கோ வகைகள் கிடைக்கின்றன. மேலும் இந்த அனைத்து வகைகளிலும் ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகை உள்ளது.
மாருதி சுஸுகி டிசையர் மீது ரூ.15,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் செடான் கார் இதுவாகும். இது மாருதி ஸ்விஃப்ட் அடிப்படையிலான செடான் ஆகும்
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோவில் ரூ.20,000 வரை சேமிக்கலாம். எஸ்-பிரஸ்ஸோவின் பலம் அதன் எஸ்யூவி போன்ற வடிவமைப்பாகும். இது 1.0 லிட்டர் எஞ்சின் (68எச்பி) கொண்டுள்ளது. எஸ்-பிரஸ்ஸோவின் அனைத்து வகைகளிலும் ரூ.20,000 வரையிலான நன்மைகள் கிடைக்கும். எந்தவொரு காரின் சிஎன்ஜி வகைகளிலும் சலுகைகள் இல்லை என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை தெளிபடுத்துகிறோம். (குறிப்பு- நகரம் மற்றும் டீலரைப் பொறுத்து சலுகைகள் மாறும். எனவே, வாங்கும் முன் டீலரிடம் பேசி இவற்றை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.)