சுக்கிரனின் அருளால் உருவாகும் மாளவ்ய யோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை, ராஜயோகம்

Venus Transit 2022: செல்வம், மகிழ்ச்சி, பொலிவு, ஆடம்பரத்துக்கு காரணியான சுக்கிரன் கிரகம் அக்டோபர் 18 இரவு 9.38 மணிக்கு தனது ராசியை மாற்றி துலாம் ராசிக்குள் பிரவேசித்துள்ளார். சுக்கிரன் நவம்பர் 11, 2022 வரை துலாம் ராசியில் இருந்து அதன் பிறகு விருச்சிக ராசியில் நுழைகிறார். அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரன் கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஜாதகருக்கு மாளவ்ய யோகம் உருவாகும். இதன் சுப பலன்கள் சில ராசிகளுக்கு கிடைக்கும். எனினும், சுக்கிரன் நீச்சமாக இருப்பதால், இதன் முழு பலனும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்காது. சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும் என இந்த பதிவில் காணலாம். 

1 /5

சுக்கிரன் கோச்சாரத்தின் போது, மறைமுக எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

2 /5

சுக்கிரனின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு பண பலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் பெரிய லாபம் பெறலாம். 

3 /5

எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைகள் நிறைவேறும். புதிய வேலை கிடைக்கும். துலா ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, மரியாதை, பணம் கிடைக்கும்.

4 /5

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சுப பலன்களைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். 

5 /5

கும்ப ராசிக்காரர்களுக்கு முதலீடு செய்ய இது நல்ல நேரம். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். தொழில்-வியாபாரத்தில் லாபமும், மரியாதையும் மதிப்பும் கூடும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)