Warning Signs Of A Heart Attack: மாரடைப்பு உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு பொதுவான நோய் ஆகும். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தற்போது பல இளம் வயதினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இதய நோய்கள் பொதுவான வகை நோய்களாகு. ஆய்வின் படி, 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 20 பேரில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை உள்ளது. இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால் இதய பிரச்சனை இருப்பது அவர்களுக்கே தெரியாது.
இதயத்திற்கு இரத்த விநியோகம் தடைபட்டு, கொழுப்பு படிந்து மாரடைப்பு ஏற்படுவதால் இதய பிரச்சினைகள் உருவாகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்களுக்கும் இதய பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மூச்சுத் திணறல் அல்லது திடீர் மயக்கம், தலைச்சுற்றல் போன்ற உணர்வு ஏற்படுவது மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
கால்களில் திடீர் வீக்கம் ஏற்பட்டால் அதுவும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், கீழ் கால்களில் வீக்கம் ஏற்படும்.
உங்கள் இதய துடிப்பு அதிக படபடப்பை நீங்கள் உணர்ந்தால், அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். சில சமயங்களில் உடனே உயிர் போகவும் வாய்ப்புள்ளது. மேலும், தோல் நீலம் அல்லது சாம்பல் நிறமாக மாறும். இதுவும் இதய நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.