தற்போது இருக்கும் உணவு முறை, வேலை நேரம் காரணமாக பலரும் கம்மி நேரம் மட்டுமே தூங்குகின்றனர். இதனால் பல தீமைகள் ஏற்படுகிறது.
நாம் தூங்கும் நேரம் மற்றும் தரம் சில சமயங்களில் புற்றுநோயை உருவாக்கலாம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. கம்மியான தூக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இரவு நேர வேலை, பணி சுமைகள் ஆகியவை இந்தியாவில் பெரும்பாலான மக்களின் தூக்கத்தை பாதிக்கும் காரணியாக மாறி உள்ளது.
சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது புற்றுநோய்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
7 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குவது நல்ல தூக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் இரவு தூங்கும் முன் மொபைல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
காலையில் எழுந்ததும் வாக்கிங் அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இரவு நன்றாக தூங்க உதவக்கூடும்.