Fruits to Regulate Menstruation cycle: பலருக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கும். ஒரு சில உணவுகள் இந்த பிரச்சனையை சரிசெய்ய உதவும். அவை என்னென்ன தெரியுமா?
சரியாக, குறிப்பிட்ட தேதிக்கு மாதவிடாய் ஏற்படாதது பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். சரியாக மாதவிடாய் வராததற்கு ஹார்மோன்ஸ் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். சில சமயம், உடல் எடை அதிகமாக அல்லது குறைவாக இருப்பவர்களுக்கும் மாதவிடாய் பிரச்சனை ஏற்படலாம். இவையன்றி, சரியாக குறிப்பிட்ட தேதியில் மாதவிடாய் வருவதற்கு என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ்!
பெண்மணிகள் பலருக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். சரியான நேரத்திற்கு மாதவிடாய் வராமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கும். உடல் எடை அதிகமாக இருப்பது, எடை குறைவாக இருப்பது, இரத்த சோகை, பி.சி.ஓ.எஸ், பி.சி.ஓ.டி என இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
இந்த மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய ஒரு சில உணவுகள் இருக்கின்றன. உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, இவற்றை நீங்கள் பின்பற்றுவதால் கண்டிப்பாக உங்களுக்கும் மாதவிடாய் பிரச்சனை தீரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவற்றின் ஆற்றல் நிறைந்த காய்கறியாகும். இந்த காய்கறி, வயிறு வீக்கம் (Bloating), நீர் தேக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும். இது, மாதவிடாய் காலத்தில் அனைத்து பெண்களுக்கு பொதுவாக நடக்கும் ஒன்றாகும்.
வெல்லம், பெண்களுக்கு மாதவிடாய் வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதை, கொஞ்சம் இஞ்சி, எள் போன்றவற்றுடன் கலந்து சாப்பிடலாம். இதை அப்படியே மென்று சாப்பிட்டு சூடான தண்ணீரை குடிக்கலாம். இப்படி செய்து வர, கண்டிப்பாக நேரத்திற்கு மாதவிடாய் வந்துவிடுமாம்.
மஞ்சளில் கருப்பை மற்றும் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை சக்தி உள்ளது. மஞ்சள் உடலில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவைக் கொண்டிருக்கிறது, இது கருப்பையை விரிவுபடுத்துகிறது மற்றும் மாதவிடாய் வர தூண்டுகிறது. மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மையைக் குறைக்க, பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம். இதை அடிக்கடி குடித்து வர, உங்களுக்கு மாதவிடாய் சீராக அதிக வாய்ப்புள்ளது.
உங்கள் டயட்டில் தினமும் இஞ்சி சேர்த்துக்கொள்வதால் உங்களது மாதவிடாய் பிரச்சனைகள் குறையும். இஞ்சியை துருவி, அதை ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக இரத்த ஓட்டம் சீராகி மாதவிடாய் குறிப்பிட்ட தேதியில் வரும்.
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் கண்டிப்பாக மாதவிடாயை சீர்படுத்தலாம். உதாரணத்திற்கு, பப்பாளி பழத்தை எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராஜின் சத்துக்கள் ஹார்மோன் சமநிலையின்மையை சீர் செய்யும். அன்னாசி பழம், கிவி பழம், எலுமிச்சை பழம், ஆரஞ்சு, மாம்பழம் ஆகியவை வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களாகும்.