புத்தாண்டில் இந்த 4 ராசிக்காரர்களை அலைகழிக்கவிருக்கும் காலசர்ப்ப தோஷம்! உஷார்!!

புதுடெல்லி: புத்தாண்டு பிறக்கும்போது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். இந்த முறையும் மக்கள் 2022 ஆம் ஆண்டின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஆனால் 2022 ஆம் ஆண்டு பிறந்த ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உருவாகுவது சில ராசிக்காரர்களுக்கு பின்னடைவாக இருக்கும். 

 

1 /5

2022-ம் ஆண்டு காலசர்ப்ப தோஷம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக முதல் 3 மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும். தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். இது தவிர, பொருட்கள் திருடப்படலாம் அல்லது பிறரால் ஏமாற்றப்படலாம், எனவே கவனமாக இருங்கள்.

2 /5

காலசர்ப்ப தோஷம் கன்னி ராசியினருக்கு எதிர்மறையான யோகத்தை ஏற்படுத்தும். வெளியில் சாப்பிடுவதை முடிந்த அளவு குறைக்கவும். ஏனென்றால், 24 ஏப்ரல் 2022 வரை ஆரோக்கியத்தில் அதிலும் குறிப்பாக உணவால் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பானங்கள் அருந்துவதிலும் கவனமாக இருக்கவும். மதுப்பிரியர்கள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

3 /5

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். மற்றவர்களின் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் மனச்சோர்வுக்கு ஆளாகலாம். குறிப்பாக 24 ஏப்ரல் 2022 வரையில் நேரம் மோசமாக இருக்கிறது.

4 /5

இந்த நேரம் மீன ராசிக்காரர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை கொடுக்கும்  ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள். ஒருவரைப் பிரியும் துக்கமும் ஏற்படலாம். இந்த நேரத்தை பொறுமையுடன் எடுத்துக்கொள்வது நல்லது.  

5 /5

இந்த 4 ராசிக்காரர்களும் கால சர்ப்ப தோஷத்தால் மன அழுத்தம் மற்றும் கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். சிவ-பஞ்சாக்ஷர் ஸ்தோத்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்வது இந்த சூழ்நிலையை சமாளிக்க உதவியாக இருக்கும்.   (பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ்அதை உறுதிப்படுத்தவில்லை.)