குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்!

குழந்தைகளுக்கு அடிக்கடி முடியாமல் வருவது சகஜம் தான் என்றாலும் அதனை சாதாரணமாக கடந்துவிட கூடாது. உரிய நேரத்தில் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.

1 /6

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். சரியாக சாப்பிடாமல் இருப்பதும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

2 /6

சில சமயம் குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் இது போன்ற வயிற்று வலிகள் ஏற்படும். எனவே இதனை சாதாரணமாக பார்க்க கூடாது.

3 /6

இந்தப் புழுக்கள் வயிற்றில் ஒட்டுண்ணிகளாகச் செயல்பட்டு உணவில் உள்ள ஊட்டச் சத்துகளை எடுத்துக்கொள்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு பல நோய்களும் ஏற்படுகிறது.

4 /6

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருப்பது இயல்பானது என்றாலும் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

5 /6

நாடாப்புழுக்கள், உருண்டைப்புழுக்கள், ஊசிப்புழுக்கள், நூல்புழுக்கள் போன்றவை குழந்தைகளின் வயிற்றில் காணப்படும். அடிக்கடி எச்சில் துப்புதல், வயிற்றுவலி, திடீரென்று உடல் மெலிந்து காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது.

6 /6

இது போன்ற சமயத்தில் வீட்டு வைத்தியம் முயற்சி செய்யாமல் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது உடனடி பலனளிக்கும். (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)