ஏசியில் அதிக நேரம் இருப்பவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!

தற்போது பலரும் ஏசியில் இருக்க பழகிவிட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஏசியில் இருக்கும் போது உடலில் சில பாதிப்புகள் ஏற்படும்.

 

1 /6

ஏசியில் நீண்ட நேரம் இருக்கும் போது சருமம் வறட்சி ஏற்பட்டு, ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் ஒருசிலருக்கு சுவாச பிரச்சனைகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.   

2 /6

அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் நீண்ட நேரம் ஏசியில் இருக்கும் போது, ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  

3 /6

ஏசியில் இருந்து வரும் காற்று உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.   

4 /6

ஏசியில் நீண்ட நேரம் இருக்கும் போது தலைவலி, சோர்வு, தசை வலி ஆகியவற்றை ஏற்படுத்தும். ஏசியில் ஒரே இடத்தில் இருக்கும் போது மூட்டு விறைப்பு ஏற்பட்டு இந்த பிரச்சனைகள் ஏற்படும்.   

5 /6

ஏசியில் நீண்ட நேரம் இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். இதனால் அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  

6 /6

ஏசியில் தூங்கும் போது ஆழ்ந்த தூக்கம் வராது. இதனால் உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கப்பட்டு, உடல் வெப்பநிலையை பராமரிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும்.