அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு பற்றிய சுவாரஸ்ய தகவல்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 62-வது படமான 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது.

 

1 /5

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு 'விடாமுயற்சி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  

2 /5

அஜித் தற்போது நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் மே இரண்டாம் வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் மே-22ம் தேதியன்று படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  

3 /5

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 நாட்கள் நடைபெறும் என்றும், இப்படத்திற்கு அஜித் ஜூன் மாதத்தில் 40 நாட்களுக்கு கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.  

4 /5

ஏகே 62 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு மே 1ம் தேதியன்று 'விடாமுயற்சி' என்று அதிகாரபூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.  ஆரம்பத்தில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டு இயக்குனராக மகிழ் திருமேனி உறுதிசெய்யப்பட்டார்.  

5 /5

இப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் சிறந்த ஆக்ஷன் எண்டெர்டெயினர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க,  நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.