விடாமுயற்சியில் அஜித்தின் கெட்டப் இது தான்! வெளியான புகைப்படம்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.

1 /5

அஜித் நடிக்கும் அவரது 62வது படமான விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தொடங்கி உள்ளது. 

2 /5

முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

3 /5

விடாமுயற்சியில் படத்தில் திரிஷா, ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர்.

4 /5

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இது தான் விடாமுயற்சியில் அஜித்தின் கெட்டப் என்றும் கூறப்படுகிறது.

5 /5

இன்னும் பர்ஸ்ட் லுக் வெளியாகாத நிலையில், அஜித்தின் கெட்டப் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.