ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவுக்கு ‘இவர்’தான் காரணமா! ரசிகர்கள் அதிர்ச்சி..

Aishwarya and Dhanush Reason For Separation: இயக்குநரும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் கடந்த ஆண்டு திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். 

Aishwarya and Dhanush Reason For Separation: பிரபல நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு முடிவுற்றது. தனுஷும் ஐஸ்வர்யாவும், தாங்கள் திருமண உறவில் இருந்து விலகுவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். 

1 /7

கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தம்பதியாக வலம் வந்தவர்கள், தனுஷ்-ஐஸ்வர்யா. இவர்கள், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமண உறவில் இருந்து விலகுவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 /7

தனுஷ், காதல் கொண்டேன் படத்தில் நடித்த போது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. சில மாதங்கள் காதலித்து வந்த இவர்களுக்கு, இரு வீட்டாரும் இணைந்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். 

3 /7

தனுஷ்-ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு யாத்ரா-லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, இருவரும் ஒருவரையொருவர் விட்டு பிரிவதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

4 /7

ஐஸ்வர்யா, தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். தற்போது இவரது இயக்கத்தில் லால் சலாம் படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். பாலிவுட்டிலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 

5 /7

ஐஸ்வர்யா-தனுஷ் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதை அடுத்து அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

6 /7

தனுஷ் இயக்கும் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று அப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா கொடுத்துள்ள நேர்காணல் வைரலாகி வருகிறது. 

7 /7

சௌந்தர்யா அந்த நேர்காணலில் தனுஷின் இந்த கதையை தான் முதலில் இயக்க இருந்ததாகவும் ஆனால் நடிகர்கள் சரியாக கிடைக்காததால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக இருந்த போது, அவர் தனது தங்கையுடன் சேர்ந்து பணிபுரிய கூடாது என தனுஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுவே இருவரும் பிரிந்ததற்கான சண்டையாக இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.