Actor Vishal: விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்!

விஜய் சமீபத்தில் தனது கட்சியை அறிவித்ததை தொடர்ந்து, நடிகர் விஷாலும் புதிய கட்சியை தொடங்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

 

1 /5

கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சியை தொடங்கி விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.    

2 /5

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக, தளபதி 69 படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலக உள்ளார்.  

3 /5

இந்நிலையில், நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.  விஷால் பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆர்வம் காட்சி வருகிறார்.  சென்னை ஆர்.கே.நகர் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட இருந்த விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.   

4 /5

சமீபத்தில் விஷால் தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றம் செய்துள்ள உள்ளார்.  மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்.   

5 /5

தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளார் விஷால். கூடிய விரைவில் கட்சி பெயரை அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.