Poonam Bajwa : சேலையிலும் கவர்ச்சி காட்டும் பூனம் பஜ்வா! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..

Poonam Bajwa Latest Photos : தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் வெகு விரைவில் பிரபலமானவர் பூனம் பஜ்வா. இவர் தற்போது புடவை கட்டிய சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றை இங்கு பார்ப்போம். 

Poonam Bajwa Latest Photos : தமிழில் இருக்கும் வேறு மொழி நாயகிகளுள் ஒருவர் பூனம் பஜ்வா. சேவல் படம் மூலம் அறிமுகமான சின்ன பெண்ணாக அறிமுகமான பூனம் பஜ்வா, அதன் பிறகு பல்வேறு கோலிவுட் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். சில படங்களிலேயே நடித்திருந்தாலும், வெகு விரைவில் பிரபலமான நடிகை இவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதால் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /8

பூனம் பஜ்வா, தமிழ் மட்டுமன்றி மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரையுலகில் இவர் நடிப்பில் முதன் முதலில் வெளியான படம், மொடட்டி சினிமா என்ற தெலுங்கு படம்தான்.   

2 /8

பஞ்சாப்பை சேர்ந்த இவர், பாம்பேயில் படித்து வளர்ந்தார். உள்ளூர் அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வென்ற இவர், கல்லூரியில் சேருவதற்கு முன்பே திரையுலகிற்குள் நுழைந்தார்.   

3 /8

நல்ல நடிகை என்று பெயர் எடுத்திருக்கும் இவர், படிப்பிலும் கெட்டிக்காரியாக விளங்கினார். இவர், பூனேவில் பி.ஏ.ஆங்கிலம் பட்டப்படிப்பு பயின்றிருக்கிறார்.

4 /8

எளிமையான மேக்-அப், அபாரமான நடிப்பு இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. தமிழில் இவர் நடிப்பில் வெளியான சேவல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படம் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது. 

5 /8

தொடர்ந்து ஜீவாவுடன் தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் என இரு படங்களில் நடித்தார்.   

6 /8

பூனம் பஜ்வாவிற்கு, சில ஆண்டுகளாகவே சரியான பட வாய்ப்புகள் வருவதில்லை. இதையடுத்து அவர் இன்ஸ்டா தளத்தில் படு ஆக்டிவாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

7 /8

அந்த வகையில், சமீபத்தில் வெளியிட்டிருந்த சில புடவைக்கட்டிய போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

8 /8

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், புடவையிலும் கவர்ச்சியா..என வாய் பிளந்து வருகின்றனர்.