புதிதாக அரசியில் கட்சி தொடங்கும் விஷால்! விஜய்க்கு போட்டியா?

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், விஷாலும் அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளார்.

 

1 /5

நடிகர் விஷால் தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், தனிக்கட்சியா அல்லது கூட்டணியா என்பதை அந்த சமயத்தில் முடிவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.   

2 /5

ஏற்கனவே விஷால் அரசியல் நுழைவு குறித்து பல செய்திகள் வெளியான நிலையில், இன்று விஷால் உறுதிபடுத்தி உள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகளை செய்து தர அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.  

3 /5

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் நிறைய உதவிகளை செய்து வருகிறேன். வரும் காலத்திலும் அதனை தொடர்ந்து செய்வேன்.  மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று விஷால் இன்று கூறியுள்ளார்.  

4 /5

விஷால் சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதற்காக மனு தாக்களும் செய்து இருந்தார்.  ஆனால் அவரது வேட்புமனு கடைசி நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.   

5 /5

கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்து இருந்த நிலையில், விஷாலும் அதில் இணைந்துள்ளார்.