Vijay: பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு சென்ற விஜய்! ஆரவார அலப்பறையுடன் வரவேற்ற ரசிகர்கள்..

Actor Vijay In Thiruvananthapuram Kerala Viral Photos : நடிகர் விஜய், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு இன்று ஷூட்டிங்கிற்காக சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Actor Vijay In Thiruvananthapuram Kerala  Viral Photos : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழும் விஜய், தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு சென்றார். இவரை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். 

1 /7

நடிகர் விஜய், தற்போது தனது 68வது படமான GOAT (Greatest Of All Time) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். 

2 /7

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படம், கண்டிப்பாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. 

3 /7

GOAT படத்தில் நடிகர் விஜய், அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.

4 /7

விஜய், தனது படத்தில் ஷூட்டிங்கிற்காக தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு சென்றிருக்கிறார். இவர், கடைசியாக பல வருடங்களுக்கு முன்னர் கேரளாவிற்கு சென்றாராம். 

5 /7

விஜய்யை பார்க்க, பல ஆயிரம் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். அவர்களை பார்த்து புன்னகைத்தபடியே விஜய் தனது காரில் ஏறி சென்றார். 

6 /7

பொதுவாகவே, தமிழ் நடிகர்களுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, ரஜினி, விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும். 

7 /7

விஜய்யின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய்யின் புதிய தோற்றத்திற்கு ரசிகர்கள் பலர் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.