Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..

Actor Vijay Kallakurichi Photos : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ரனர். இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய், அவர்களை நேரில் சந்தித்தார்.

Actor Vijay Kallakurichi Photos : தமிழகத்தையே கடந்த இரண்டு தினங்களாக உலுக்கியிருக்கிறது கள்ளக்குறிச்சி-விஷச்சாராய விவகாரம். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, அவர் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அவர், வாழ்த்து செய்திகளை மட்டும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

1 /8

கள்ளக்குறிச்சி, விஷச்சாராய விவகாரம் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை, விஷச்சாராயம் குடித்தோரில் 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்தார். 

2 /8

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தலைத்தூக்க தொடங்கியதை அடுத்து, நேற்று திரை பிரபலங்கள் உள்பட பலர் தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்தனார். அதில், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவர் விஜய்யும் ஒருவர். 

3 /8

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று கூறியிருந்தார். 

4 /8

“கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.” என்றும் அவர் கூறியிருந்தார். 

5 /8

"இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். 

6 /8

GOAT படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து தனது 69வது படத்திலும் நடிக்க இருக்கிறார். இது, அவரது கடைசி படமாக இருக்கும். இதில் நடித்து முடித்த பிறகு மொத்தமாக அரசியலில் இறங்க இருக்கிறார். 

7 /8

கள்ளக்குறிச்சிக்கு சென்ற நடிகர் விஜய், அங்குள்ள மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டவர்களையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

8 /8

அப்போது, ஒரு பெண் நடிகர் விஜய்யின் காலில் விழப்போக, அவர் கையை பிடித்து தடுத்து நிறுத்திய விஜய் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.