Legend Saravanan : அடையாளமே தெரியாமல் இளைஞராக மாறிய லெஜண்ட் சரவணன்! வைரல் போட்டோஸ்...

Legend Saravanan Recent Photos: தொழிலதிபராக இருந்து நடிகராக மாறியிருக்கும் லெஜண்ட் சரவணனின் தற்போதைய லுக், இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Legend Saravanan Recent Photos: தமிழகத்தின் பிரபலமான துணிக்கடை மற்றும் அதன் கிளைகளின் உரிமையாளராக இருப்பவர், லெஜண்ட் சரவணன். தனது கடையின் ஆடை விளம்பரத்தில் இவரே நடிக்க, அந்த விளம்பரம் சூப்பர் ஹிட் ஆனது. அதிலிருந்து இவருக்கு சினிமா ஆசையும் வந்து விட்டது. ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

“பெஸ்டு பெஸ்டு..” என்ற ஒரு துணிக்கடை விளம்பரத்தில்தான் நாம் முதன் முதலில் லெஜண்ட் சரவணனை பார்த்திருப்போம். 

2 /8

அந்த விளம்பரத்தில், இவருடன் சேர்ந்து இரண்டு நாயகிகள் ஆடினாலும் மக்களின் கவனம் முழுக்க சரவணன் மீதுதான் இருந்தது. 

3 /8

தனது கடையின் விளம்பரம் ஹிட் ஆனதை தொடர்ந்து, சரவணனுக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. 

4 /8

சரவணனுக்கு, ‘லெஜண்ட்’ படம் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம், ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோரின் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. 

5 /8

இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், சரவணனின் முயற்சிக்கு மக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது. 

6 /8

லெஜண்ட் படத்தை அடுத்து, அதன் இரண்டாம் பாகமும் தயராகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள் லெஜண்ட் சரவணன் இன்னொரு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். 

7 /8

சரவணன் தற்போது கைக்கோர்த்திருப்பது எந்த இயக்குநருடன் தெரியுமா? சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமாருடன்தான். 

8 /8

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. இதில் நடிப்பதற்காக, சரவணன், மொத்தமாக ஆளே மாறியிருக்கிறார். இளைஞர் போல தோற்றம் கொண்டுள்ள இவரது வயது என்ன தெரியுமா? 58. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?