நடிகர் அர்ஜுன் தனக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் ஒரு ஏக்கர் பரப்பளவில், ஆஞ்சநேயர் கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார். இன்று அந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நடிகர் அர்ஜுன் தனக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் ஒரு ஏக்கர் பரப்பளவில், ஆஞ்சநேயர் கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார். இன்று அந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அர்ஜூனும் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டியுள்ளார். அவர் தனக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை நிர்மாணித்து உள்ளார்.
ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆஞ்சனேயரின் திருமேனி 28 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்டது. கர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் செய்யப்பட்ட பகவான் ஆஞ்சனேயரின் திருமேனி சுமார் 200 டன் எடை கொண்டது.
ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்ற சிலையை, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சஸ டிரக்கில் ஏற்றி கோயில் அமைந்துள்ள கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.
கும்பாபிஷேகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். நடிகர் அர்ஜுன் முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக, கடந்தவாரம், சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கும்பாபிஷேகம் மிகவும் எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி நடைபெற்ற விசேஷ பூஜைகளில் வெகு சிலரே கலந்துகொண்டனர்.